"விஜய்க்கு அடுக்கு மொழியில் பேசயாரோ கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்"- திருமாவளவன்

 
அ அ

தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லித் தந்திருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தவெக தலைவர் விஜய்க்கு, தூய சக்தி, தீய சக்தி என்று அடுக்குமொழியில் பேச யாரோ சொல்லி தந்திருக்கிறார்கள். மக்கள் முடிவு செய்வார்கள். இலங்கையில் இயற்றப்பட உள்ள புதிய அரசமைப்பு சட்டத்தில் கூட்டாட்சி முறையை கொண்டுவர இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு அங்கேயே தங்கும் விடுதி ஏற்படுத்தி தர முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.