காவல்துறை முதல்வர் வசம் இருக்கிறதா அமித்ஷா வசம் இருக்கிறதா? - திருமாவளவன்

 
thiruma

பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Image

பாஜகவுக்கு எதிரான ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “பதற்றத்தை உருவாக்க வேண்டுமென சிலர் திட்டமிட்டு செயல்படுகின்றனர். பெரியார் இயக்கங்களை சார்ந்தவர்களை திட்டமிட்டு சீண்டுகின்றனர். பெரியார் சிலை மீது சாயம் பூசி வம்புக்கு இழுக்கிறார்கள். அம்பேத்கரை இந்துத்துவாவின் அடையாளமாக காண்பிக்கிறார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கடந்த 10 ஆண்டுகளாக திணித்துவருகின்றனர். ஜனநாயகம் என்பது ஒரு கருத்தியல்தான், தமிழ்மொழியைப் பாதுகாப்பதைத் தாண்டி ஜனநாயகத்தைக் காப்பதுதான் நமக்கு முக்கியம், நமது அடையாளம் தமிழ் மொழி அல்ல, ஜனநாயகம்தான் நமது அடையாளம்.


அரசே கவனக் குறைவாக இருக்காதே. காவல்துறையே மெத்தனமாக இருக்காதே. தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும். அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. அதிமுக ஆட்சியில் வேண்டுமானால் அமித்ஷா கட்டுப்பாட்டில் இருக்கலாம். காவி உடை அணிந்தவர்கள் எல்லாம் துறவிகள் என்று நினைக்கக் கூடாது, இப்பொழுதெல்லாம் ரவுடிகளும் காவி உடை அணிந்து இருக்கிறார்கள்.21ம் நூற்றாண்டிலும் கோமியம் குடிப்பவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள் என்றால் இந்த நாடு எங்கே போய்கொண்டு இருக்கிறது என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” எனக் கூறினார்.