வீட்டுக்குள் கூட தியானம் செய்யலாம்! இது தேர்தல் பிரச்சார உத்தி- திருமாவளவன்

 
வீட்டுக்குள்ளே கூட தியானம் செய்யலாம்! இது தேர்தல் பிரச்சார உத்தி- திருமாவளவன்

சென்னை பெசன்ட்நகர் இராஜாஜி அரங்கத்தில் நடைபெற்ற   பத்மாவதி (மூத்த விஞ்ஞானி) எழுதிய வியப்பூட்டும் பஞ்சபூதங்களும் உயிரூட்டும் நீர் நிலைகளும் நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்  நூலை வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல் திருமாவளவன், “ஜூன் 1 நாளை கடைசி கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது. அதன் பின்னர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. நாடு இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. 10 ஆண்டு காலம் இருளில் மூழ்கிய இந்திய தேசம் வெளிச்சத்திற்கு வரப்போகிறது. விடியல் பிறக்கப் போகிறது. மோடி சாம்ராஜ்யம் என்கிற பெயரில்  இங்கே ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு ஆட்சி நிர்வாகத்தை நடத்தினார். ஜனநாயகம் பாதுகாக்கப்பட மக்கள் தீர்ப்பு எழுதி இருக்கிறார்கள். தீர்ப்பு வெளியாகும் நாள் தான் ஜூன் 4 ஆம் தேதி. இந்த சூழலில்  பிரதமர் மோடி  கன்னியாகுமரியில் வந்து விவேகானந்தர் அமர்ந்த பாறையில் அமர்ந்து தியானம் இருக்கிறார். 

நரேந்திரர் விவேகானந்தர் போல் பாறையில்  அமர்ந்து தியானம் செய்தால்  விவேகானந்தர் ஆகிவிட முடியாது வெறுப்பு அரசியலை விதைக்கின்ற வெறுப்பானந்தாவாக  வேண்டுமானால் ஆக முடியுமே தவிர அந்த  விவேகானந்தரைப் போல நரேந்திரர் நன்மதிப்பை பெற முடியாது. மோடி ஆட்சிக்கு முடிவு கட்டும் நாள் ஜூன் 4. ஜனநாயகத்தை பாதுகாக்கும் தீர்ப்பு எழுதும் நாள் ஜூன் 4. பெருவாரியான இடங்களை பிடித்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். தமிழ்கம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுக பக்கம் நெருங்குகிறேனா? அதெல்லாம் இல்ல: ஜெயக்குமாருக்கு திருமாவளவன் பதிலடி

சங்பரிவாக்களுக்கு இங்கு இடமில்லை என்று அழுத்தி சொல்லுகிற தீர்ப்பு தான் இந்த தேர்தல் தீர்ப்பு. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வித்தைகளை செய்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. சென்ற முறை அவர் இமாச்சல் பிரதேசத்திற்கு சென்று அங்கு ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்தார். அதை நாடு முழுவதும்  பரப்பினர்‌. கடைசி கட்ட தேர்தல் யுத்தி தான்  இந்த முறை விவேகானந்தர் பாறையில் தியானம். இது ஒரு அரசியல் யுத்தி  மக்கள் இந்த  வலைக்குள் விழுவார்கள் என்று எதிர்பார்க்கிறார். இது 100 விழுக்காடு அப்பட்டமான தேர்தலுக்காகதானோ  தவிர இது தனிப்பட்ட முறையில் தியானம் செய்கிறார் என்பதில்லை. தேர்தல் முடிவுக்கு பிறகு இதே போன்று  தியானம் நடக்கலாம் அல்லது வெளிச்சம் போட்டு காட்டாமல் வீட்டுக்குள்ளே கூட தியானம் இருக்கலாம். பாறை மீது தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர் தியானத்தை  தேர்ந்தெடுத்த காலம் இவை அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்திற்கான உத்தி தான். வழக்கம்போல தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும். அதுபோலவே ஒவ்வொரு கட்சியும்  எவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறார்கள்? யார் முன்னிலையில் உள்ளனர்?  என்பது  ஒரு மணி நேரம் முதல்  இரண்டு மணி நேரத்திற்குள்  நாடு முழுக்க தெரிந்துவிடும். 

இந்த முறை அதை தலைகீழாக மாற்றுவது ஏன்? என்று விளங்கவில்லை தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஒரு சார்பாக இயங்குகிறது போன்ற ஒரு தோற்றம் உருவாகி இருக்கிறது. இந்தியா கூட்டணி ஒப்பந்தம் என்னவென்றால் தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். தேர்தலுக்குப் பிறகு நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஒரு புரிதலை உருவாக்கி இருக்கிற ஒரு  கூட்டணி இந்த கூட்டணி. தேர்தலுக்கு  முன் ஏற்படும் உடன்பாடு மற்றும்  தேர்தலுக்குப் பிறகு ஏற்படுகிற கூட்டணி என்பது தனித்தனியாக நாம் வெற்றி பெற்றாலும்  அது இந்தியா கூட்டணிக்கான உறுப்பினர்கள் தான். தேர்தலுக்குப் பிறகு பிரமாண்ட கூட்டணி உருவாகும். இது தேர்தலுக்கு பிறகு உருவாக்க போகிற பிரம்மாண்டத்தை காட்டும் கூட்டணி” என்றார்.