திமுகவை எதிர்த்து அதிமுகவால் அரசியல் செய்ய முடியவில்லை- திருமாவளவன்

 
thiruma

நாகர்கோவிலில் நடைபெற்ற தோள் சீலை போராட்டத்தின் 200-ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார். 

திருமா

அப்போது பேசிய அவர், “அய்யா வைகுண்டர் அமைதியாக போராடினார். இன்றைய சனாதன சக்திகள் போல 24 மணிநேரத்தில் கைது செய்து பார் என அரைவேக்காட்டுதனமாக பேசவில்லை. அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாடு அரசு பள்ளி பாடபுத்தகத்தில் சேர்க்க வேண்டும். திமுகவை எதிர்த்து அதிமுகவால் அரசியல் செய்ய முடியவில்லை. அதனால் பாஜக எதிர்த்து நிற்க அதிமுக வழிவிட்டு நிற்கிறது. ஆளே இல்லாத கட்சி ஆட்டம் போடுகிறது வால் ஆட்டுகிறது என்றால், அதற்கு காரணம் அதிமுகதான்.. அவர்கள் கொடுத்த இடம்தான். 

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நல்லிணக்கத்தோடு வெற்றிகரமாக இயங்கி வருகிறது , இந்தக் கூட்டணியை அவதூறுகளால் பிளவுப் படுத்த முடியாது. மதம் தொடர்பான வெறுப்பு அரசியல் கருத்துகளை பாஜகவினர் தொடர்ந்து பேசுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு பாஜகதான் காரணம். முடிந்தால் கைது செய்யுங்கள் என்று ஆட்சியாளர்களுக்கு கெடு விடுப்பது அண்ணாமலையின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. பீகார் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதை வேண்டுமானாலும் அரசியலுக்காக செய்வார்கள், ஒட்டு மொத்த இந்துகளை சாதியின்பால் பிரித்து அரசியல் நடத்துவார்கள் அவ்வளவு அரசியல் அருவருப்பு கொண்டவர்கள் பாஜகவினர்” என்றார்.