விஜய்யை சாடிய திருமாவளவன்..! ஒரு தேர்தலில் கூட நிற்காதவர்களை எல்லாம் அடுத்த முதல்வரா...

மகளிர் தின விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவரின் உரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை விமர்சிக்கும் ரீதியில் அமைந்திருந்தது.
குறிப்பாக, "இப்போதே 20 சதவீதம், 24 சதவீதம் என்று எழுதுகிறார்கள். அடுத்த முதலமைச்சரே இவர் தான் என்று ஊடகங்களே வரிந்து கட்டிக் கொண்டு வலிந்து, வலிந்து செய்தியை ஊதி பூதாகரப்படுத்துகிறார்கள்
இன்னும் ஒரு தேர்தலில் கூட நிற்கவில்லை. எவ்வளவு வாக்குகள் பெறுவார்கள் என்று கூட யாருக்கும் தெரியாது. ஆனாலும், இந்த சமூகமும், ஊடகமும் எத்தகைய அணுகுமுறையை கொண்டிருக்கின்றன என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட சமூகத்தில் தான் அங்குலம், அங்குலமாக போராடி இந்த அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கிறோம்" என திருமாவளவன் தெரிவித்திருந்தார். முன்னதாக, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய் கலந்து கொண்டதால், அந்நிகழ்வில் பங்கேற்பதை திருமாவளவன் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.