“சினிமா ஹீரோ போல திடீரெனத் தோன்றி சாதிய வன்கொடுமையை ஒழித்துவிட முடியாது”- திருமாவளவன்
அரசியல்படுத்துதல் என்பது ஆள் பிடிப்பது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற விசிக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், “சினிமாவில் ஹீரோ தோன்றுவது போல, திடீரெனத் தோன்றி சாதிய வன்கொடுமை, பெண் அடிமைத்தனத்தை ஒழித்துவிட முடியாது. அதற்கு நீண்ட நெடிய அரசியல்படுத்துதல் தேவை. அரசியல்படுத்துதல் என்பது ஆள் பிடிப்பது அல்ல. பிற கட்சியில் இருந்து ஆள் பிடித்து வந்து வந்து தன் கட்சியில் சேர்ப்பது அல்ல. கொள்கை தெரியாதவர்களை 10 லட்சம் பேராக இருந்தலும் சரி, 10 ஆயிரம் பேராக இருந்தலும் சரி, அவர்களை சேர்ப்பது வீண். கொள்ளை இல்லாதவர்களை கட்சியில் சேர்ப்பதால் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாது. வி.சி.க. தேர்தலுக்காக உருவான இயக்கம் அல்ல, மக்களின் தேவைக்காக உருவானது. தமிழ் தேசியம் பேசும் சிலர் சாதி ஒழிப்பு பேசுவதில்லை. தமிழ் தேசியம் பேசுவோர் விசிகவுக்கு என் வருவதில்லை? தேர்தல் நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் ஆட்சி மாற்றம் நிகழ்த்த முடியும். ஆட்சியை கைப்பற்ற முடியும். ஆனால் கூட்டிக் கழித்து பார்த்தால் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்திருக்காது” என்றார்.

