ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு... பரபரப்பு வீடியோவை வெளியிட்டு உடனே டெலிட் செய்த திருமாவளவன்

 
திருமாவளவன்

‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு...’ என தான் பேசிய பழைய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட விசிக தலைவர் திருமாவளவன் அதனை தற்போது நீக்கிவிட்டார்.

விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து போத மக்கள் வைத்த கோரிக்கை மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு...’  என தான் பேசிய பழைய வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் திருமாவளவன் வெளியிட்டார். அந்த வீடியோவில், “எதிர்த்து பேசக்கூடாது, போராட கூடாது, கல்வியில் உயர்ந்துவிடக்கூடாது, உயர்ந்த பதவிக்கு வந்துவிட ஆசைப்படக்கூடாது.ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடக்கூடாது என்றனர். கூட்டணி ஆட்சி என குரலை உயர்த்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு...  கடைசி மனிதனுக்கும் சனநாயகம்.. எளிய மக்களுக்கும் அதிகாரம் வேண்டும்” என பேசியிருந்தார். இந்த வீடியோ குறித்து  சமூக வலைதளங்களில் விவாத பொருளான நிலையில் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து நீக்கினார். மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க., த.வெ.க.,வை அழைத்த சர்ச்சை ஓய்வதற்குள், புதிய சர்ச்சை வெடித்துள்ளது.