இடஒதுக்கீடு இல்லையென்றால் ஒரு தலித் கூட எம்பி, எம்எல்ஏ ஆக முடியாது- திருமா

 
thiruma

மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியின் திசை என்ற புதிய புத்தகக் கடை திறப்பு நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ, இயக்குனர் அமீர், நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பாஜக விஷயத்தில் பினராயி விஜயனைப்போல் ஸ்டாலின் உறுதியாக நிற்கலாம்!" -  திருமாவளவன் ஓப்பன் டாக் | vck leader Thol Thirumavalavan shares his views  on current political happenings

மேடையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலை உள்ள கடையை திறந்து வைக்கின்ற வாய்ப்பை கொடுத்ததற்காக திருமுருகன் காந்திக்கு நன்றி. சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிக்க வேண்டும் என்றும் 21 ஆம் நூற்றாண்டில் சாதி, சமயம் வேண்டாம் என்ற வழியில் பயணிப்பது தான் முற்போக்கு வழியாகும். தேர்தலுக்காகவே சிலர் சேரிகளுக்கு வருகின்றனர். இடஒதுக்கீடு இல்லையென்றால் ஒரு தலித்தும் எம்.பி, எம்.எல்.ஏ. என ஆக முடியாது.

அம்பேத்கரையும் பெரியாரையும் அனைவரும் படிக்க வேண்டும். பெரியார் இயக்கத்தில் இருந்தாலும் அம்பேத்கரின் இயக்கதை படிக்க வேண்டும், அம்பேத்கர் இயக்கத்தில் இருந்தாலும் பெரியாரையும், மார்க்சியமும் படிக்க வேண்டும். இத்தகைய புரிதல் உருவாவதற்கான ஒரு களமே, திசை என்ற புத்தக நிலையம்” என தெரிவித்தார்.