குதிரை பேரம் உண்மையாக இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

 
திருமாவளவன்

ஆளுநருக்கு அதிகாரம் இருந்தால் அவர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கட்டும் என தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க் கட்சிகளின் விமர்சனங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து அதிமுக தலைவர்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்?. தவெகவிற்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன? அதிமுகவை முழுவதுமாக தவெகவில் இணைப்போம் தவெக தரப்பில் சொல்லப்படுகிறதென்றால் அவர்களிடம் இது சரியா? ஜனநாயகமா? அரசியல் அறமா? என்ற கேள்விகளை கேட்க வேண்டும். ஆளுநரிடம் கொடுக்கப்பட்டுள்ள குதிரை பேரம் புகார் உண்மை என்றால் அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். குதிரை பேரம் என்பது முக்கிய பிரச்சனைதான், அதுபற்றி தவெக, அதிமுக, திமுகவை நேரடியாக கேள்வி கேளுங்கள். அவர்களிடம் கேட்காமல் இடையில் உள்ள எங்களிடம் கேள்வி கேட்பதில் எந்த பயனும் இல்லை. எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் குறித்த புகார் உண்மையாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அதிகாரம் இருந்தால் உடனடியாக தலையிட வேண்டும். அதிமுகவினர் தவெகவில் இணைவது குறித்து ஈபிஎஸ் தான் பதிலளிக்க வேண்டும்” என்றார்.