தேர்தலில் பின் வாங்கியது ஏன்? திமுக அழுத்தமா?- திருமாவளவன் விளக்கம்
காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவதில் இருந்து விலகியதில் திமுகவின் அழுத்தம் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டால், தேர்தல் நிதி உள்ளிட்ட எந்த பலனும் கொடுக்கமாட்டோம். மேலும் கூட்டணியில் இடம்பெறுவதும் சந்தேகம் என திமுகவிடம் இருந்து ஆணை வந்ததாகவும், அதனால் திருமாவளவன் தனது முடிவில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.உ
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவதில் இருந்து விலகியதில் திமுகவின் அழுத்தம் இல்லை. உதயநிதி போட்டியாக நான் வருவேன் என ஆதவ் கருத்து ஆதாரமில்லாத, அதீத கற்பனை. நான் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுவதில் இருந்து விலகியதில் திமுகவின் அழுத்தம் இல்லை. இளையபெருமாள் குடும்பத்திற்கு மரியாதை தர வேண்டும் என்பதற்காக நான் நிற்கும் தொகுதியை விட்டுக்கொடுத்தேன்” என்றார்.

