"விசிகவும் அதிக தொகுதிகளை கோரும்" - திருமாவளவன்
திமுக கூட்டணியில் நாங்களும் அதிக தொகுதிகளை கோருவோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் நாங்களும் அதிக தொகுதிகளை கோருவோம். கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பது இயல்பான, வாடிக்கையான ஒன்று. பேச்சுவார்த்தையின் போது மனம்விட்டு பேசி அதன் அடிப்படையில் முடிவு எடுப்போம். அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும், ஆட்சி அமைக்கும் என்பது ஒரு விதமான பில்டப். இந்த நொடி வரை திமுக கூட்டணிதான் ஒரு கூட்டணியாக வடிவம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் ஒரு வடிவமே பெறவில்லை.
முருக பக்தர்கள் மதவாத அரசியலை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். எத்தனை ஆன்மீக மாநாடுகளை நடத்தினாலும் தமிழ்நாட்டில் பாஜகவால் வெற்றி பெற முடியாது. மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள்” என்றார்.


