“பெரியாரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது சீமானுக்கு நல்லதல்ல”- திருநாவுக்கரசர்

 
ராகுலுக்கு வயசு இருக்கு! கண்டிப்பாக அவர் பிரதமராவார்- திருநாவுக்கரசர்

உலகம் போற்றும் தலைவர் பெரியார் குறித்து பேசுவது சீமானுக்கு நல்லதல்ல என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ராகுலுக்கு வயசு இருக்கு! கண்டிப்பாக அவர் பிரதமராவார்- திருநாவுக்கரசர்

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், “கடந்த நான்கு ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான திட்டங்களை  முதலமைச்சர் ஸ்டாலினும் நிறைவேற்றி வருகிறார். மக்களிடம் நெருக்கமாக பழகி, மாவட்டம் வாரியாக சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகள் மற்றும் தேவையான திட்ட பணிகளை ஆய்வு செய்து மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து நிறைவேற்றி வருகிறார். மக்களோடு மக்களாக இருந்து மக்களின் தேவைகளை நிறைவேற்று வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆட்சிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ஈரோடு இடைத்தேர்தலில் மக்கள் வாக்களிப்பார்கள். வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ உரிமை கேட்பது அந்த கட்சியினரின் உரிமை ஆனால் இதில் மரபணு சோதனை மற்றும் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரண்டரை ஆண்டுகள் தீர விசாரித்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. சிபிஐ விசாரணை இன்னும் காலதாமதத்தை தான் ஏற்படுத்தும் காவல்துறைக்கு யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் கிடையாது, அவசர கோலத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கை இல்லை தீவிர விசாரணைக்கு பிறகு தான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தந்தை பெரியார் குறித்து சீமான் பேசுவது கண்டனத்துக்குரியது. தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் வாழுகின்ற பெரும்பான்மை தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர், அவருடைய சித்தாந்தங்கள் கொள்கைகள் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தந்தை பெரியாரே தனது கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள் என எந்த இடத்திலும் சொல்லவில்லை. அவரது கருத்தில் உடன்படுவது அவரவர் விருப்பமானது. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் மதிக்கப்படும் ஒரு தலைவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது சீமானுக்கு நல்லதல்ல. சீமானுக்கு இதனை ஆலோசனையாக சொல்கிறேன். அவருக்கு எனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பேச்சு இந்த தேர்தல் களத்தில் எந்த பிரதிபலிப்பையும் ஏற்படுத்தாது. மக்கள் தெளிவாக இருக்கின்றனர். பெரியார் பிறந்து வாழ்ந்த மண்ணில் அவரைப் பற்றி மக்களுக்கு தெரியும் சீமானின் பரப்புரையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வரலாற்று சிறப்புமிக்க மகத்தான வெற்றியை பெறுவார்” என்றார்.