ஆதவ் அர்ஜூனாவுக்கு மறைமுக திட்டம்- திருமாவளவன் பரபரப்பு புகார்
இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் தொடர்ந்து எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வருகிறார், அவரின் இந்த செயல் மூலம் ஏதோ மறைமுக செயல் திட்டம் அவருக்கு இருப்பதாக தெரிகிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னும் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவருக்கு ஏதோ செயல்திட்டம் இருப்பதை உணர முடிகிறது. ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வதே தவறு. அப்படி சொல்லக்கூடாது. ஆதவ் அர்ஜூனா மீண்டும் விசிகவில் இருக்க வேண்டுமென நினைத்திருந்தால் 6 மாதங்கள் அமைதியாக இருந்திருப்பார். இடைநீக்கம் என்பது வெறும் கண் துடைப்பு அல்ல.
மழை வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். கால்நடைகள், பொருட்களின் சேதங்களுக்கு ஏற்ப நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.