இந்தியா கூட்டணி பக்குவம் பெற மக்கள் அவகாசம் தந்துள்ளனர்- திருமாவளவன்

 
திருமா

இந்தியா கூட்டணி இன்னும் முதிர்ச்சியடைய வேண்டும்.. நிறைய குறைகள் இருக்கிறது என விசிக எம்பி திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும்” குரல் எழுப்பும் திருமா

மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் எம்.பி., “
இந்தியா கூட்டணி இன்னும் பக்குவம் பெற வேண்டும். அதற்கான கால அவகாசம் மக்கள் கொடுத்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் தனித்துப் போட்டி, கேரளாவில் காங்கிரஸ்- கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டி, இந்த குறைபாட்டோடு தேசத்தை ‘இந்தியா கூட்டணியிடம் ஒப்படைக்க மக்கள் விரும்பவில்லை. அம்பேத்கர் கொள்கைக்கு நேர்மாறாக மோடி செயல்படுகிறார்

ஒவ்வொரு தேர்தலிலும் உரிய பாடம் புகட்டினாலும் தமிழ்நாட்டை பாஜகவினர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. விஜயபிரபாகரன் சட்டப்பூர்வமாக போராடுவது நல்லது. விருதுநகர் தொகுதி மக்கள் கொடுத்த முடிவை ஏற்றுக்கொண்டு விஜயபிரபாகரன் சட்டப்பூர்வமாக போராட வேண்டும். பாஜகவால் நிலையான ஆட்சியை தரமுடியாது” எனக் கூறினார்.