“மோடியின் 5 ஆண்டு காலத்திற்கு ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக்குறி”- திருமாவளவன்

 
“பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவியே வேண்டும்” குரல் எழுப்பும் திருமா

மோடி தலைமையிலான அரசு ஐந்தாண்டு காலத்திற்கு நீடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

“விசிகவுக்கு 6 தொகுதிகள்” :  பாஜகவால் கலக்கத்தில் திருமா


டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “நாட்டின் அரசியலமைப்பைக் காக்க வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் வேண்டுகோளை மக்கள் நிறைவேற்றியுள்ளனர். தனிப்பெரும்பான்மை பெற முடியாத பின்னடைவு பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடி பிரதமர் பதவியில் நீடிப்பது பொருத்தமானது இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்றிருந்தாலும் மக்களின் தீர்ப்பு மோடிக்கு எதிராக உள்ளது 

நரேந்திர மோடி தலைமையில் அமையவுள்ள அரசு அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு நீடிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்நேரத்திலும் கருத்து வேறுபாடு எழ வாய்ப்பு இருக்கிறது; பாஜகவை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் ஏக்நாத் ஷிண்டே தங்களுடைய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது நாட்டிற்கு ஜனநாயகத்திற்கும் நல்லதல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.


...