ஆண்டுக்கு ஒரு பிரதமர்! மோடிக்கு பதட்டமாக உள்ளது: திருமாவளவன்

 
thiruma

அனைத்திந்திய பாங்க் ஆஃப் பரோடா ஒபிசி தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னை புரசைவாக்கத்தில்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.

thiruma

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், “ஓபிசி சமூகத்தினரை மதத்தின் பெயரால் வெறும் வாக்கு வங்கியாக  மட்டும் பயன்படுத்தக்கூடிய பாஜக அரசை  அனைவரும் அறிவோம்.இந்த சூழலில் பகுஜன் ஒற்றுமை எஸ்சி,எஸ்டி,ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஆகிய பகுஜன் சமூகத்தினர் ஒற்றுமை முக்கியமானது, இட ஒதுக்கெடுக்கும், சமூகநீதி கோட்பாட்டிற்க்கும் எதிரானவர்கள் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.ஆகவே அவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும். சமூகநீதி கோட்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த மாநாட்டில் நான் வலியுறுத்தி உள்ளேன். ஓபிசி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டிற்காகவும், பகுஜன்  ஒற்றுமைக்காகவும் முன்னால் பிரதமர் வி பி சிங்யும் கான்ஷியராம், விபி மண்டல்போன்றவர்களை  நாம் மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் பிரதமர் ஆற்றுகின்ற உரை மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களித்தார்கள் என்பதை உணர முடிகிறது.பிரதமர் அண்மை காலமாக பேசி வருகிற கருத்துகள் அவர் மிகவும் பதட்டத்திலும்  தோல்வி  பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

குறிப்பாக இந்து சமூகத்தின் நிலை குறித்தும் ராமர் கோவிலை  புல் டவுசர் வைத்து இடித்து விடுவார்கள் எச்சரிக்கையாக  இருங்கள் என்று சொன்னதையும் அடுத்தடுத்து அமித் ஷா போன்றவர்கள் பேசி வருகிற கருத்துகளையும் சரி அவர்கள் ஒவ்வொரு கட்டத் தேர்தலிலும் பதட்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.ஆகவே ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கின்ற தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்தியா கூட்டணியில்  இலக்கு இல்லை குழப்பம் தான் இருக்கிறது என பிரதமர் மோடிய கருத்திற்கு பதில் அளித்த தொல் திருமாவளவன், அவர்தான் குழப்பத்தில் இருக்கிறார், ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்குவார்கள் என பிரதமர் கூறுவது ஒரு வகையில் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆண்டுக்கு ஒரு பிரதமர் இருப்பது என்ன தவறு..? ஒரே கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் உறுதியாகவும்,கட்டுக்கோப்பாகவும் இருக்கும். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவது தவறே இல்லைஅப்படி வந்தால் அதை ஆதரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் எனக் கூறினார்.