மு.க.ஸ்டாலினுக்கு பெண்களிடையே செல்வாக்கு உயரும்- திருமாவளவன்

 
அதிமுக பக்கம் நெருங்குகிறேனா? அதெல்லாம் இல்ல: ஜெயக்குமாருக்கு திருமாவளவன் பதிலடி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களிடையே செல்வாக்கு உயரும் என விசிக தலைவரும் எம்பியுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

திருமாவளவன்

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்களிடையே செல்வாக்கு உயரும். ஒரு பெண் என்ற அடிப்படையில் பிரேமலதா விஜயகாந்த் உரிமைத்தொகை திட்டத்தை பாராட்டி இருக்க வேண்டும். இந்த திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இனி எந்த ஒரு ஆட்சியாளரும் நிறுத்த முடியாது. காலை உணவு திட்டத்தை போல மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கை உயர்த்தும். தமிழ்நாட்டில் ஆவின் பொருட்களின் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்து உயர்த்திய விலையை குறைக்க அரசு முன்வர வேண்டும்

இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து, பிரதமர் நரேந்திரமோடி பதற்றத்துடன் இருக்கிறார். பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இல்லையென்று சொன்னால் இந்து மதத்தை தூக்கி கொண்டாட தயார். சனாதன தர்மத்தை அரசின் தர்மமாக அறிவிக்க வேண்டும் என்பதே மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ன் நோக்கம். சனாதனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆரியர்களின் வாழ்வை தொகுப்பதற்காக எழுதப்பட்ட ஒரு நூல்தான் மனுஸ்மிருதி. மனுஸ்மிருதிக்கு எதிராக எழுதப்பட்டதுதான் அரசியலமைப்புச்சட்டம். மனுஸ்மிருதி சட்டம் சனாதனம் பேசுகிறது. அரசியலமைப்புச் சட்டம் ஜனநாயகம் பேசுகிறது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு நிலையானது என சனாதனம் சொல்கிறது. அப்படி இல்லையென்று சொன்னால் இந்து மதத்தை தூக்கி கொண்டாட தயார். இந்தியா கூட்டணிக்குள் உள்ள இந்து பற்றாளர்களை பிரித்து இழுக்க மோடி முயற்சிக்கிறார். இந்தியாவின் பெயரை இந்து ராஷ்டிரம் என மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்” என்றார்.