"கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை"- திருமாவளவன்

 
thiruma

விசிக தேர்தல் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thiruma


சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கர்நாடக முதலமைச்சராக தேர்வாகியுள்ள சித்தராமையாவுக்கு வாழ்த்துகள். மக்கள்தொகை அடிப்படையில் சமூக வாரியாக இடஒதுக்கீட்டின் அளவை உயர்த்த செயல் திட்டம் வகுக்க வேண்டும். விசிக தேர்தல் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தெளிவாக இருக்கிறோம். அதிமுக பாஜகவுடன் பயணித்தால் அதிமுகவிற்கு பயன் இல்லை. எதிர்காலத்தில் பாஜகவால் அதிமுக பலவீனப்படும். அதற்கான வாய்ப்புகள் உள்ளன. பாஜக திருட்டு தனமாக தில்லு முல்லு செய்து ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. அதிமுக, பாமகவின் சுயநலத்தால் பாஜக தமிழ்நாட்டில் நுழைகிறது. திமுக கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்த செயலிலும் விசிக ஈடுபடாது” என்றார்.

கர்நாடக தேர்தல் வெற்றிக்கு பின்னர் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை கழற்றி விட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி இருந்தார். அதுமட்டுமின்றி, மதுவிலக்குக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி போராடினால் அவருடன் இணைந்து போராட தயார் என திருமாவளவன் கூறியிருந்தார். உடனே பாஜக- அதிமுகவுடனான கூட்டணியில் இணைந்துகொள்ளும்படி பாஜக திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்தது. அதிமுகவோ, திருமாவளவனுக்கு திமுக கூட்டணியில் நீடிக்க விருப்பம் இல்லை என தெரிவித்து வருகிறது. இந்த சூழலில் கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.