”மு.க.ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பாஜகவுக்கு எதிரான சக்திகளை இணைக்க வேண்டும்”

 
mkstalin

முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai News Highlights: VCK leader Thol Thirumavalavan urges CM Stalin to  curb violence against Dalits | Cities News,The Indian Express

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க  தலைவர் திருமாவளவன், “முதலமைச்சர் அகில இந்திய பார்வையோடு அரசியலில் காய்களை நகர்த்தி வருகிறார். பா.ஜ.க வை வரும் நாடாளுமன்ற தேர்த்தலில் வீழ்த்த வியூகம் வகுத்து உள்ளார். மு.க. ஸ்டாலின் நேற்று பிறந்தநாள் என்று மட்டும் இல்லாமல் வர  இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான  அரசியல் பரப்புரையின் தொடக்கவுரையாக பேசி உள்ளார்.

அகில இந்திய அளவில் உள்ள பா.ஜ.க விற்கு எதிராக உள்ள கட்சிகளை இணைக்கும் வகையில் முதலமைச்சர் நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொள்ள வேண்டும். அகில இந்திய அளவில் மு.க ஸ்டாலினின் பங்களிப்பு தேவை என்று பலரும் கூறி உள்ளனர். திமுக அதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்பதற்கு உதாரணமாக மு.க ஸ்டாலின் செயல்பட்டுள்ளார். பா.ஜ.கவை வீழ்த்த மு.க ஸ்டாலின் திடீரென எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் இதற்கு முன்பாகவே வியூகம் வகித்து விட்டார்.

Thol Thirumavalavan| Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு

காங்கிரசுடன் இணைந்து பி.ஜே.பியை வீழ்த்த வேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் தரப்பிலும் முன் வைக்கபட்ட கோரிக்கை தான். ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி காங்கிரஸ்க்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. மக்கள் எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்ததற்கு மற்றுமொரு உதாரணம். ஒன்றிய அரசால் சாமானிய மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த அரசு கார்ப்ரேட்டுக்கு ஆதரவான அரசு என்பதை அவர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர். அதானி வீழ்ந்து போகாமல் பாதுகாப்பதில் தான் மோடிக்கு அக்கறை இருக்கிறது. மக்களின் நலன் மீது அக்கறை இல்லை. இந்திய ஒன்றிய அரசு சமையல் விலையை உயர்த்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த விலை உயர்வு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்” என்றார்.