திமுகவிடம் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம் - திருமாவளவன் பேட்டி

 
Thiruma

மக்களவை தேர்தலில் போட்டியிட 4 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,   நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.  இதேபோல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

tn

இந்த நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட 4 தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்,  நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 7 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளோம். அதில் மூன்று தனி தொகுதிகள் மற்றும் ஒரு பொது தொகுதி உட்பட 4 தொகுதிகளை கேட்டுள்ளோம். எந்தெந்த தொகுதி விசிகவுக்கு ஒதுக்கவுள்ளனர் என்பதை திமுக முடிவு செய்தபின், நான் எந்த தொகுதியில் போட்டியிடவுள்ளேன் என்பது தெரிய வரும்.
வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் நடத்த உள்ளோம், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.