கமல்ஹாசனை சந்தித்து நன்றி தெரிவித்த திருமாவளவன்
May 10, 2024, 15:47 IST1715336238259

இன்று (09.05.2024) மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன், கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார், துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் தனது கட்சி நிர்வாகிகளோடு சந்தித்தார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தலைவர் கமல்ஹாசன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் போட்டியிட்ட தனக்கும், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார் அவர்களுக்கும் ஆதரித்து பரப்புரை செய்தமைக்கு, திருமாவளவன் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன், தற்போதைய அரசியல் மற்றும் தேர்தல் நிலவரம் பற்றி கமல்ஹாசனும், திருமாவளவனும் கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உடனிருந்தார்.