புதிய இளந்தலைமுறையினர் சாதி, மத அடையாளங்களின்றி வளர வேண்டும் - திருமாவளவன்

 
thiruma

பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் சாதிய - மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்திட மழலையர் நாளில் உறுதியேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து 'மதசார்பின்மை' கோட்பாட்டை புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமைப்பதில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றுவோம். 


புதிய இளந்தலைமுறையினர் சாதி, மத அடையாளங்களின்றி வளர வேண்டுமென்கிற அவரது கனவு நனவாகிட மழலைச் செல்வங்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் சாதிய - மதவெறி சக்திகளைத் தனிமைப்படுத்திட மழலையர் நாளில் உறுதியேற்போம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.