பவதாரணியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன் இரங்கல்!

 
Thiruma

இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரணி மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் மகளும் , பாடகியுமான பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக நேற்று உயிரிழந்தார்.  அவருக்கு வயது 47. சுமார் ஆறு மாதங்களாக இலங்கையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் பவதாரணி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணியளவில் காலமானார்.  பின்னணிப் பாடகியான பவதாரணி 10 படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்று என்ற பாடலுக்காக தேசிய விருதினையும் பெற்றுள்ளார். பவதாரிணி இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், பவதாரணி மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இசைஞானி_இளையராஜா அவர்களின் அன்புமகள் பவதாரணியின் மறைவு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இன்னும் பல பத்தாண்டுகள் வாழ வேண்டியவர். அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் வாய்ந்த பாடகர். எமது இயக்கப் பாடல் ஒன்றையும் பாடியவர்.  அவரது மறைவு கலையுலகிற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.