“யாருடைய தயவும் இல்லாமல் தவெகவுக்கு 108 இடங்களை மக்கள் தந்துள்ளனர்”- திருமாவளவன்
கூட்டணி இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல், சாதி-மத எல்லைகளை கடந்து ஒரு கட்சிக்கு 108 இடங்களை மக்கள் தந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், “ஒரே ஒரு கட்சி கூட்டணி இல்லாமல், யாருடைய தயவும் இல்லாமல், ஓட்டுக்கு காசு கொடுக்காமல், சாதி வரம்புகளை கடந்து, மத வரம்புகளை கடந்து, எல்லா அரசியலையும் கடந்து ஒரு கட்சிக்கு 108 இடங்களை தமிழ்நாட்டு மக்கள் தந்திருக்கிறார்கள். அரசியலில் புது அத்தியாயம் பிறந்துள்ளது. எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் கூட்டணி அமைந்துள்ளது. மகத்தான கோட்பாடுகளை முன்னிறுத்தி இக்கூட்டணி உருவாகி உள்ளது. விசிக இடம் பெற்றுள்ள இக்கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் விசிகவின் கொள்கை ஆசான்கள் பெரியார், அம்பேத்கர், காமராசர் தான் தவெகவின் கொள்கைத் தலைவர்கள்” என்றார்.

