வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த கட்சி திமுக தான்.. பாமகவால் வன்னியர்கள் பயன்பெறவில்லை- திருமா

 
திருமா

தமிழ்நாட்டில் ஓ.பி.சி என இருந்தை பிரித்து எம்.பி.சி என உருவாக்கி 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தவர் கலைஞர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் விக்கிரவாண்டி கடை வீதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக போட்டியிடவில்லை. இடைத்தேர்தலை தவிர்த்தில்லை. ஆனால் இப்போது அதிமுக வேட்பாளரை நிறுத்த தயங்குவது அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. வெற்றியோ, தோல்வியோ தேர்தலை சந்திக்க வேண்டும். பாமகவும், பாஜகவும் ஒரு அணியில் உள்ளனர். அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்தது தற்போது தனித்து நிற்கிறது. இரு கட்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 40 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்தியா முழும் 28 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினோம். ஆனால் எந்த மாநிலத்திலும் வெற்றி இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் நூற்று நூறு வெற்றி பெற்ற கூட்டணி திமுக கூட்டணி. 

சிறுபான்மையினர், தலித் வாக்குகளை குறிவைத்துதான் அதிமுக, பாஜகவுடன் கூட்டணியில் இருந்து வந்து தனியாக நின்றார்கள். ஆனாலும் தலித், சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவில்லை. இடஒதுக்கீட்டுக்கு, அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கட்சி பாஜக. பாஜக சமூகநீதிக்கு எதிரான கட்சி. அண்ணாமலை நாள்தோறும் உளறிக்கொண்டு இருந்தால் நாள்தோறும் அவர் தான் தலைப்பு செய்தி, ஆனால் மக்கள் நிராகரித்தார்கள். ஆறு தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜகவினர் சமூக ஊடங்களில் பரப்பினார்கள். ஆனால் வெற்றி பெறவில்லை. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்த கட்சி திமுக. அதிமுக ஆட்சியில் வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனால் கலைஞர் ஆட்சியில் தான் 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார்.

இப்படி அப்பட்டமான பொய்களை உரையாக தயாரிக்கலாமா? இது பாஜகவின் தேர்தல் பரப்புரை..  திமிரும் திருமாவளவன்!

தமிழ்நாட்டில்  ஒபிசி என இருந்ததை எம்பிசி என பிரிவை உருவாக்கி இடஒதுக்கீடு பிரித்து கொடுத்தவர் கலைஞர். வன்னியர் உள்ளடக்கிய ஒபிசி இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியவர். சமூக நீதிக்கு எதிரான கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு இடஒதுக்கீடு குறித்து மேடையிலேயே பேசியிருக்கிறார்கள். பாமகவுக்கு உண்மையான சமூகநீதியில் அக்கறை இருந்திருந்தால் வாழ்நாள் முழுதும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்ககூடாது. திமுக கூட்டணி கட்சிகள் வன்னியர், தாழ்த்தப்பட்ட மக்கள் மோதிக்கொள்ள வேண்டும் என நினைப்பதாக பேசுகிறார்கள். மேலிடத்து உத்தரவால் வேட்பாளரை நிறுத்தாமல் மறைமுகமாக பாமகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்கிறது.” என்றார்.