நீலகிரியில் திருமாவளவன் படகு சவாரி

 
ச்

நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாடாளுமன்ற பாதுகாப்பு நிலை குழுவினர் பைக்காரா இல்லத்தில் படகு சவாரி செய்தனர்.

குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு நேற்று நாடாளுமன்ற பாதுகாப்பு நிலை குழுவினர் 14 பேர்  வருகை தந்தனர். ஆய்வுக்கு பின்  உதகைக்கு வந்த திருமாவளவன் உள்ளிட்டோர் உதகையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினர். இதனை தொடர்ந்து  இன்று பைக்காரா படகை இல்லத்திற்கு சென்றர். அங்கு திருமாவளவன் உட்பட நாடாளுமன்ற பாதுகாப்பு நிலை குழுவினரும் படகில் பயணித்து மகிழ்ந்தனர்.  இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் வைரலாகி வருகிறது.