சிஏஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து வருகிற 15ம் தேதி ஆர்ப்பாட்டம் - திருமாவளவன்

 
thiruma

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து வருகிற 15ம் தேதி தமிழகம் முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில், தேர்தல் வருவதை முன்னிட்டு அரசியல் ஆதாயத்திற்காக மத்திய பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து வருகிற 15ம் தேதி தமிழகம் முழுவதும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். 

Thiruma

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்(CAA) மூலம் மதச் சார்பின்மையை சிதைக்கும் -  மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் -  இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பைத் தீவிரப்படுத்தும் -  இதன்வழி அரசியல் ஆதாயம் தேடும் -  ஃபாசிச பாஜக அரசைக் கண்டித்து. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில்  15.03.2024 வெள்ளிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  அனைத்து சனநாயக சக்திகளும் பங்கேற்கும் வகையில் இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.