பாஜகவால் அதிமுகவுக்கு எந்த பயனுமில்லை - திருமாவளவன்

 
thirumavalavan

பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வரும்; இதை பாஜக உணர வேண்டும்!" - சொல்கிறார்  தொல்.திருமாவளவன் | thol thirumavalavan press meet in thoothukudi

தமிழக பாஜகவில் இருந்து  ஐடி விங்க் தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் என்று கூண்டோடு வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற அண்ணாமலை ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி தெரிவித்துவருகின்றன.

ஆனால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜகவை போல் அதிமுக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டால் பாஜகவால் ஈடுகட்ட முடியாது. பாஜகவினர் சிலர் விருப்பப்பட்டு இணைகிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அண்ணா மலைக்கு தேவை” என அறிவுறுத்தியிருந்தார். 

இந்நிலையில் சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ள வேண்டும். அதிமுக தோளில் ஏறி சவாரி செய்து வெற்றி பெற முயற்சிக்கிறது பாஜக. அதிமுக இல்லாமல் பாஜக தனித்து நிற்காது, பாஜக இல்லாமல் வரும் தேர்தலை சந்தித்தால்தான் அதிமுகவுக்கும் நல்லது, தமிழ்நாட்டுக்கும் நல்லது. பாஜக கூட்டணியால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. பாஜகவுடனான கூட்டணி அதிமுகவுக்கு நல்லதல்ல. அதிமுகவை பாஜகவினர் தனித்து செயல்பட விடாமாட்டார்கள். எனவே அதிமுக சுதந்திரமாக முடிவு செய்ய வேண்டும். அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு” எனக் கூறினார்.