திருமுல்லைவாயிலில் தந்தை, மகள் மர்ம மரணம் - போலீஸ் தீவிர விசாரணை

 
dead body dead body

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் தந்தை, மகள் மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்து கிடந்த சம்பவ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த வீட்டில் கதவு பூட்டியே இருந்த நிலையில், அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் திருமுல்லைவாயில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 
வீட்டில் உள்ள அறையில் தந்தையும், மகளும் சடலமாக கிடந்துள்ளனர்.
இதனையடுத்து இருவரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தை மற்றும் மகள் மர்மமான முறையில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இருவரும் தற்கொலை செய்துகொண்டனரா? அல்லது யாராவது இருவரையும் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.