திருமலா பால் மேலாளர் மரணம் - குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது நடவடிக்கை

 
ச் ச்

திருமலா பால் நிறுவன மேலாளர் பணமோசடி விவகாரத்தில் தற்கொலை செய்த விவகாரத்தில் மாதாவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருமலா பால் நிறுவனத்தின் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்த திரு. நவீன் என்பவர், அந்த நிறுவனத்தில் ரூ.44.50 கோடி கையாடல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சென்னை கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் திரு. பாண்டியராஜன் விசாரித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27 ஆம் தேதி, திரு. நவீன் மீது புகாரளித்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களாகியும், சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், துணை ஆணையரே நேரடியாக விசாரித்தார்.

சென்னையில் பிரபல திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் நவீன் நேற்று முன் தினம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாதவரத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜயபாஸ்கர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரூ.44.50 கோடி கையாடல் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் விசாரித்ததால் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் பணியிடமாற்றம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.