"நான் போயிருக்கலாம்; மகன் இருந்திருக்கலாம்" என்றார் இளங்கோவன் கட்டிய குரலில்... வைரமுத்து கண்ணீர் அஞ்சலி

 
tn

ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும் ,  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  திருமகன் ஈவேரா எம்எல்ஏ மாரடைப்பால் நேற்று காலமானார்.

tn

எம்எல்ஏ திருமகனின் மரணம் அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அத்துடன்  எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ், சீமான் உள்ளிட்ட ஏராளமானோர் திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

பெரியார் பரம்பரைத்
திருமகன் இறந்தது பேரதிர்ச்சி

நான் போயிருக்கலாம்;
மகன் இருந்திருக்கலாம்
என்றார் இளங்கோவன்
கட்டிய குரலில்

இல்லை; இருவருக்குமே
போகிற வயதில்லை
என்றேன் நான்

மரணம் கண்தெரியாத காற்று
அதற்கு மலர் எது சருகு எது
என்று தெரிவதில்லை

கனத்த மனத்தோடு
கண்ணீர் இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.