திருமகன் ஈவேரா மறைவு - கே.பாலகிருஷ்ணன் இரங்கல்!!

 
K balakrishnan

எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவுக்கு  கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெராவின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

tn

அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தன் மகனை இழந்து வாடும் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.