“திருக்குறள் சர்ச்சை- ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை”
இல்லாத திருக்குறல் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டிருந்த விவகாரத்தில், ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை என மருத்துவர் மோகன் பிரசாத் கூறியுள்ளார்.

தேசிய மருத்துவ தினத்தையொட்டி கடந்த 13ம் தேதி ஆளுநர் மாளிகையில் சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. “ஆளுநரின் எண்ணித் துணிக” என நடத்தப்பட்ட நிகழ்வில் ஆளுநர் மாளிகையின் பெயர் பொறித்து 50 மருத்துவர்களுக்கு பட்டயம் வழங்கப்பட்டது. அந்தக் கேடயத்தில் திருக்குறள் ஒன்றும், அச்சிடப்பட்டிருந்தது. மேலும், அந்த திருக்குறளின் வரிசை எண் 944 என்றும் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டிந்தது. ஆனால் தற்போது அப்படி திருக்குறளே இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆளுநர் வழங்கிய நினைவுப் பரிசில் போலியான திருக்குறள் இடம்பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஆளுநர் மாளிகையில் மருத்துவர்கள் தினத்தையொட்டி நடத்தப்பட்ட விழாவில் வழங்கப்பட்ட விருதுகளில், இல்லாத திருக்குறல் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டிருந்த விவகாரத்தில், ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை என நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மருத்துவர் மோகன் பிரசாத் கூறியுள்ளார்.


