திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் - குவிந்த பக்தர்கள் ; பாதுகாப்பு பணிகள் தீவிரம்

 
tnt

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து செய்வார்கள்.

tn

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி கடந்த 13ஆம் தேதி  யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. 

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் & திருக்கல்யாணம்  இந்நிலையில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று  சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடற்கரையில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில்  2500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.