திக்..திக்..நிமிடங்கள்...ரயிலில் தவறி விழுந்த பயணி: காலரைப் பிடித்து உயிரை காப்பாற்றிய போலீசார்..!

 
1

கடந்த மாதம் 29-ஆம் தேதி அனந்தபூர் ரயில் நிலையத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்தது. பைரவ நகர் பகுதியைச் சேர்ந்த ரவி குமார் என்பவர், ஓடி கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக கால் நழுவி கீழே விழுந்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் உடனடியாக செயல்பட்டு, ரவி குமாரின் சட்டை காலரை பிடித்து அவரை பலமாக வெளியே இழுத்து தள்ளி, ஓடும் ரயிலின் அடியில் சிக்காமல் அவரது உயிரை சாதுரியமாக காப்பாற்றினார்.