"சொந்த மாவட்டத்தில் ஜெயிக்க வக்கற்றவர்கள்!" - சி.வி. சண்முகம் தரப்பிற்கு அதிமுக தலைமை கடும் கண்டனம்..!
தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததும் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க ஆதரவு தரும்படி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களை வலியுறுத்தியதாகவும், அது கூடாது என்பதற்காகவே அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தெரிவித்தார் மயிலம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம்.
மேலும், மக்கள் தீர்ப்பை ஏற்று முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
இந்நிலையில், அதிமுக தலைமை இதற்கு எதிர்வினையாற்றியுள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் ஓர் பதிவை அது வெளியிடப்பட்டுள்ளது. அதில், "சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம், பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது. திமுக உடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதைதான், இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் தவெகவிடம் அமைச்சர் பதவிக்கு மண்டியிட்டு கிடந்ததாக செய்திகள் வந்தன, அதையும் ஏற்கிறீர்களா? அது சரி, நீங்கள்தான் ஏற்கனவே ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே? மேலும், நேற்று திமுகவின் செந்தில் பாலாஜியோடு அரை மணிநேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
அதிமுக யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் யார்? 1.34 கோடி வாக்குகள் கிடைத்திருப்பது அதிமுக-விற்காக, கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடி பழனிசாமிக்காக. தேர்தலில் வெற்றியையும் பெற்றுவிட்டு, உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, கட்சியை, தொண்டர்களை, நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன செய்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?.
எடப்பாடி பழனிசாமி தான் இந்த இயக்கத்தை கட்டிக் காத்தவர். இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல, தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்" என அந்த பதிவில் அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
— AIADMK - SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) May 12, 2026
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும்…

