#JUST NOW துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்கள்-மார்க்கண்டேயன்
Jul 20, 2026, 19:24 IST1784555660873
போலீசார் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டுவதாக மார்க்கண்டேயன் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. சர்க்கரை நோய் இருப்பதால் மருத்துவ பரிசோதனை உடன் தூத்துக்குடி SP அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டது. மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பத்திரிக்கையாளரை நோக்கி கூச்சலிட்டார். உடனே அவரை தடுத்த போலீசார், உள்ளே அழைத்து சென்றனர்.

