புதுசு புதுசா யோசிக்கிறாங்க..! முதல்வர் விஜய் பெயரில் மத்திய பிரதேசத்தில் பண மோசடி!

 
1

முதல்வர் ஜோசப் விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளை நிர்வாகிகள் எனக்கூறி, மத்திய பிரதேசத்தில், 'ஆன்லைன்' மூலம் மக்களை தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், நிதியுதவி வழங்குவதாகவும், சிறுதொழில் தொடங்க கடன் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறுகின்றனர்.

பின்னர் அதற்கான பதிவு கட்டணம், சரிபார்ப்பு கட்டணம், செயலாக்க கட்டணம் என கூறி தலா ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அந்த கும்பல் வசூலித்துள்ளது. ஆனால் நிதியுதவி வழங்காமலும் கடன் பெற்றுத் தராமலும் அந்த கும்பல் மக்களை ஏமாற்றியுள்ளது.

விஜய் பெயரில் மோசடி நடந்துள்ளதாக இந்தூர் போலீசில் கடந்த மாதம் ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா தெரிவித்தார்.இது குறித்து விசாரணை நடப்பதாகவும், இத்தகைய மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படியும் பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.