தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது இவர்கள் தான் - வெளியான ANS கருத்துக்கணிப்பு..!
அக்னி நியூஸ் சர்வீஸ் (ANS) 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட அக்னி நியூஸ் சர்வீசஸ் (Agni News Services) புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 56 இடங்களைப் பிடிக்கும் எனத் கணிக்கப்பட்டுள்ளது.
மண்டல வாரியான தரவுகளைப் பார்க்கும்போது, சென்னை மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் 36 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அசுர பலத்துடன் உள்ளது. இங்கு அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மத்திய மண்டலத்தில் 37-இல் 35 இடங்களையும், தென் மண்டலத்தில் 58-இல் 42 இடங்களையும் திமுக கைப்பற்றும் எனத் தெரிகிறது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை மாநில அளவில் திமுக கூட்டணி 45.4 சதவீத வாக்குகளுடன் முதலிடத்திலும், அதிமுக கூட்டணி 35.3 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தவெக 11.5 சதவீத வாக்குகளைப் பெறும். சீமானின் நாதக ஒட்டுமொத்தமாக 5.6 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான தரவுகளின்படி, சென்னை (16), திருவள்ளூர் (10), திருச்சி (9), தஞ்சாவூர் (8), மற்றும் காஞ்சிபுரம் (4) போன்ற மாவட்டங்களில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் வென்று முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தும் எனத் தெரிகிறது. அதேபோல் நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், இராமநாதபுரம், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் திமுக கூட்டணி 100% இடங்களைக் கைப்பற்றும் என ஆய்வு கூறுகிறது.

ஏன் இந்த அசைக்க முடியாத நம்பிக்கை?
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்த திட்டங்களின் பலனாக பார்க்கப்படுகிறது
* மகளிர் உரிமைத் தொகை: ஒரு கோடிக்கும் மேலான சகோதரிகளின் கைகளில் மாதந்தோறும் ₹1000 உதவித்தொகை.
* விடியல் பயணம்: கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் உழைக்கும் பெண்களின் சேமிப்பு உயர்ந்துள்ளது.
* புதுமைப்பெண் & தமிழ்ப்புதல்வன் திட்டங்கள்: அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களின் கனவுகளுக்கு அரசு தரும் மாதாந்திர ஊக்கத்தொகை.
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பசியில்லாப் பள்ளிக்கூடங்களை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெறும். தற்போதுள்ள 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 10-டன் முடிவடைகிறது. இந்தத் தேர்தல் களம் பிரதானமாக தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே அமையவுள்ளது.


