இனி அதிமுக, திமுக யாரும் கிடையாது - அமைச்சர் நிர்மல் குமார்..!

 
1

மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதிமுக தற்போது இருக்கும் நிலைக்கு திமுகவும் தள்ளப்படும் என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் திமுக, அதிமுக என எந்தக் கட்சியும் களத்தில் இருக்காது என்றும், முதல்வர் விஜயின் நல்லாட்சி மட்டுமே தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இவரது இந்த பேச்சு அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.