இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 
minister ma subramanian

 பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

masu

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த 2011 பிப். 12ஆம் தேதி திமுக ஆட்சியில்தான் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திமுக அரசின் திட்டம். இது குறித்து அதிமுக மார்தட்டி கொள்வதில் என்ன நியாயம் இருக்கமுடியும்? உண்மையிலேயே அதிமுகவால் தான் இத்திட்டப் பணிகள் தாமதமானது என்றார். 

masu

 தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது. அடுத்தவாரம் முகாம் நடைபெறும். மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும். முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புதிய காப்பீட்டு அட்டை பெற பொதுமக்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மாநிலம் முழுவதும் 714 அரசு மருத்துவமனையிலும், 886 தனியார் மருத்துவ மனையிலும் இத்திட்டத்தை செயல்படுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1,248 கோடி ஒதுக்கீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சிறார்களுக்கான தடுப்பூசி; இந்தியாவிற்கே தமிழ்நாடு சிறார்கள் முன்மாதிரியாக உள்ளனர்.  பொங்கல் பண்டிகை என்பதால் இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் இல்லை. அடுத்த வாரம் சனிக்கிழமை மீண்டும் முகாம் தொடரும்" என்று தெரிவித்தார்.