பொதுத்தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு... ரூ.115 கட்டணம் கட்டாவிட்டால் ஹால் டிக்கெட் கிடையாது
10-ம் வகுப்பு படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இன்று அக்டோபர் 14 முதல் பரபரப்பு ஆரம்பமாகியுள்ளது.
2027 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் (Nominal Roll) தயாரிப்பு பணி இன்று முதல் அக்.31 வரை மட்டுமே நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. EMIS தளத்தில் தலைமை ஆசிரியர்கள் இன்றே லாகின் செய்ய வேண்டும். மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பெற்றோர் பெயரில் ஒரு எழுத்து தவறினாலும் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. பணம் கட்டிய பிறகு திருத்தவே முடியாது என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. அதனால் பெற்றோர் கையெழுத்து போட்ட உறுதிமொழி பத்திரம் கட்டாயம் என அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா உத்தரவிட்டுள்ளார்.
TML கட்டணம் ரூ.300 - பள்ளிகள் கட்டாயம் கட்ட வேண்டும். தேர்வு கட்டணம் ரூ.115 - மாணவர்கள் கட்டாவிட்டால் தேர்வு எழுத முடியாது! தமிழ் மீடியத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் முழுவதுமாக இலவசம். SC/ST, MBC மாணவர்களுக்கும் FREE. ஆனால் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மட்டும் ரூ.115 கட்டியே ஆக வேண்டும். கடைசி தேதி அக்.31! தவறவிட்டால் ஒரு வருடம் வீண் என அறிவிக்கப்பட்டுள்ளது.

