சென்னையில் நாளை ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை

 
``Gen Z-க்களை தவறாக வழிநடத்துகின்றனர்’’- ஆளுநர் அர்லேகர்

ஆளுநர் அர்லேகர் நாளை (ஆக.15) கேரளா செல்வதால் சென்னையில் தேநீர் விருந்து இல்லை என மக்கள் மாளிகை அறிவித்துள்ளது.தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய்

பொறுப்பேற்றுள்ள நிலையில், முதன்முதலாக நாளை பங்கேற்று தேசியக் கொடி ஏற்றவுள்ளார். 80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் நடக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொறுப்பு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்வதால் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநரின் தேநீர் விருந்து கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து நாளை இரவு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகிறார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.