மே 4ம் தேதி நல்ல செய்தி வரும்: முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!

 
Q

தொழிலாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது: உரிமைக்காகவும், உழைப்பு ஏற்ற ஊதியம் பெற வேண்டும் என்பதற்கு மே தின விழா கொண்டாடப்படுகிறது. முதலில் இந்தியாவிலேயே மே முதல் நாள் விழாவை சென்னையில் தான் கொண்டாட துவங்கி இருக்கிறோம்.

திமுகவினர் உழைத்திருக்கும் உழைப்பின் பலனை, வரும் மே 4ம் தேதி பெற இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை, துளி அளவும் கூட மாற்றமில்லை. கருத்துக் கணிப்புகளை வைத்து கூறுகிறேன் என்று யாரும் கருத வேண்டிய அவசியமில்லை.

இன்னும் 2,3 நாட்களில் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிற உங்களுக்கு நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் தொழிலாளர் நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.