மக்களே உஷார்...இன்றும் நாளையும் வெப்ப அலை வீசுமாம்!!

 
tn

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

rain

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 3* – 5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-38° செல்சியஸ் இருக்கக்கூடும். 26.04.2024 முதல் 28.04.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-38° செல்சியஸ் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில் கூறியிருந்தது. 

summer

இந்நிலையில் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 3 - 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.