"திமுக ஆட்சியில் 'கமிஷன், கட்டிங், கரப்ஷன்' இருந்தது" - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
Jun 30, 2026, 14:00 IST1782808216205
சென்னையில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது: மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தார்கள். திமுக ஆட்சியில் ஒரு சதுர அடிக்கு இவ்வளவு ரேட் என கமிஷன் வசூலிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் இருந்த கமிஷன், கட்டிங், கரப்ஷனை இந்த ஆட்சியில் ஒழித்துவிட்டார்கள். திமுக கூட்டணியில் தான் இருந்தேன். கூட்டணியில் இருந்து கொண்டு அது பற்றி பேசுவது அயோக்கிய தனம்.
கூட்டணிக்குள் இருந்து கொண்டு கூட்டணியை அட்டாக் பண்ணி பேசுவது என்ன அரசியல் தர்மம்? கூட்டணி தர்மத்திற்காக பேசாமல் இருந்தேன், அதுதான் சரியான அணுகுமுறை. ஒரு கட்சி கூட்டணிக்குள் இருந்து கொண்டு அவர்களை கண்டித்து பேசுவது நாகரிகமா? நீங்கள் எத்தனை கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்.
ஒரு மணி நேரம் வேண்டுமானாலும் கேளுங்கள், நான் பதில் சொல்கிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.

