இந்தியாவில் ஒரே ஒரு ரயில்: பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் அந்த ரயில் எது? அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்திய ரயில்களில் ஒரே ஒரு ரயிலில் மட்டுமே மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அது எந்த ரயில்
மகாராஷ்டிராவின் நாந்தேட் மற்றும் பஞ்சாபின் அமிர்தசரஸ் இடையே சச்கண்ட்(sachkhand) விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயிலில் பயணிக்கும் ஒவ்வொரு பயணிகளுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. சீக்கிய பாரம்பரியமான லங்கரின் ஒரு பகுதியாக தன்னார்வலர்களால் உணவுகள் சமைக்கப்பட்டு, அந்த ரயிலில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்தியன் ரயில்வேயால் இந்த உணவு வழங்கப்படுவதில்லை. குருத்வாராக்களில் தயாரிக்கப்பட்டு தன்னார்வலர்களால் கொண்டு வரப்படுகிறது. சீக்கிய மதத்தின் மிகவும் புனிதமான இரண்டு நகரங்களான நான்டெட்டில் உள்ள ஹசூர் சாஹிப் குருத்வாரா மற்றும் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை இணைக்கும் இந்த ரயில், 33 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர் தூரத்தை கடக்கிறது. இந்த ரயில் பர்பானி, ஜல்னா, ஔரங்காபாத், போபால், புது தில்லி மற்றும் மராத்வாடா உள்ளிட்ட 39 ரயில் நிலையங்களில் நின்று, பயணிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.
தன்னார்வாலர்கள் அனைவருக்கும் வீட்டில் சமைத்த இலவச உணவை வழங்குகின்றனர். இந்த பழக்கம் கடந்த 29 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. குருத்வார் கோயில்களில் வழங்கப்படும் நன்கொடைகள் மூலம் பயணிகளுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. அங்கு உணவுகள் புதிதாகத் தயாரிக்கப்பட்டு, ரயில் நிறுத்தப்படும் போது ஏற்றப்பட்டு பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆலு பட்டா கோபி, காய்கறிகள், கிச்சடி, பருப்பு போன்ற உணவுகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. பயணிகள் வசதி மற்றும் சுகாதாரத்திற்காக தங்கள் சொந்த பாத்திரங்கள் அல்லது டிபன் பாக்ஸ்களை எடுத்துச் சென்று உணவுகளை வாங்குகின்றனர்.
சச்கண்ட் எக்ஸ்பிரஸ் (ரயில் எண். 12715/12716) தெற்கு மத்திய ரயில்வேயால் இயக்கப்படும் தினசரி அதிவேக ரயில் ஆகும். இந்த ரயில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப் வழியாகச் சென்று 39 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. , AC 2-Tier, AC 3-Tier, Sleeper மற்றும் General போன்ற பெட்டிகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


