இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை - செல்லூர் கே.ராஜூ..!

 
1

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பட்டாசு வெடித்து, 70 கிலோ கேக் வெட்டி  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், வி.பி.ஆர்.செல்வகுமார், பரவை ராஜா, கு.திரவியம், சுகந்திஅசோக், சோலைராஜா,கே.ஜெயவேல்,வக்கீல் தமிழ்செல்வம், ஏ.இந்திரா, ஏ.பார்த்திபன், ஜெ.மாணிக்கம், பேங்க் சாரதி,எம்.எஸ்.செந்தில்குமார், ஆர்.பாஸ்கரன், எம்.ஜி.ராமச்சந்திரன், தளபதி மாரியப்பன், பைக்காரா கருப்பசாமி, பகுதி முத்துவேல், விளாங்குடி கே.ஆர்.சித்தன், சக்தி விநாயகர் பாண்டியன்,வக்கீல் அசோகன், வி.கணேசன், கலைச்செல்வம், கே.வி.கே.கண்ணன், ஜெயம் ஜெயபாண்டி, ஜோசப்தனஸ்லாஸ், ரவிராஜ், மார்க்கெட் மார்நாடு, பி.ஆர்.சி.மகாலிங்கம், உசிலை தவசி, பழங்காநத்தம் ராஜாராம், வக்கீல் பாலமுருகன், சி.ஆர்.கதிரவன், கிராஸ்ரோடு ராதா, ராமர், கோவில் நெடுஞ்செழியன், கார்னர் பாஸ்கர், பஜார் துரைப்பாண்டி, எம்.ஏ.நாசர், நாகேந்திரன், திடீர்நகர் பாலா, விருமாண்டி,கே.கே.நகர் மணி, புதூர்நாகராஜ், ஏ.இந்திரா,ராணிநல்லுச்சாமி, ஷோபியா பிச்சைமணி, மலர்விழி, பூக்கடை முருகன், வி.ராஜசேகரன், பி.என்.சுந்தர்ராஜன், கறிக்கடை மலைச்சாமி, இளைஞரணி கண்ணன், கேசவன், பாவலர் ராமச்சந்திரன், குமார், பைக்காாரா செழியன், கோரிப்பாளையம் பாபு, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எல்லா துறைகளையும் கைப்பற்றுவார்கள். அதைப்போல சினிமாத்துறையையும் கைப்பற்றி உள்ளனர்.தி.மு.க.வினர்விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு திமுக எதையும் செய்யவில்லை. உதவியையும், பணத்தையும் தகுதி பார்த்து கொடுக்கிறார்கள். இந்த ஆட்சியில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.தமிழகத்தில் இது ஒரு பண்பு. யார் வாழ்த்து சொன்னாலும் எங்களுக்கு மகிழ்ச்சி..சந்தோஷம்.திமுக ஆட்சியை எதிர்த்து பேசினால் அடக்குமுறைகளால் அடக்கப்பார்க்கின்றனர்.விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்..

நடிகர் விஜய் நன்றாக செயல்படக்கூடியவர். அவர் அரசியல் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி. எம்.ஜி.ஆரை போல சம்பாதித்த பணத்தை மாணவர்களுக்கு மக்களுக்கு செலவழிக்க நினைக்கிறார்.எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்துவது அவர்களுக்கும் பெருமை. எங்களுக்கும் பெருமை.அ.தி.மு.க.  பிளவு பட்டா இருக்கிறது? என்று தொண்டர்களிடம் மறு கேள்வி எழுப்பினர்.வேப்பம்பரம் போல் பட்டு போச்சு என்று பிற கட்சிகள் அ.தி.மு.க.வை நினைத்தார்கள்?  அது ஈடுயேராது.அ.தி.மு.க. கட்சி பீனிக்ஸ் பறவை போல அழிவது போல தெரியும். ஆனால் வீறு கொண்டு எழும். அ.தி.மு.க.வை தேடி பெரும்பாலான இளைஞர்கள் வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.