சென்னையில் மழை பெய்த தடயமே இல்லை! அசத்திய மாநகராட்சி

 
ச்

சென்னை வடகிழக்கு பருவமழை 2026 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைப் (Integrated Command and Control Centre) பார்வையிட்டார்.

நேற்றைய இரவில் இருந்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அவரை சார்ந்து பணி புரியும் ஊழியர்களின் செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில்  பாராட்டுக்களை பெற்றுவருகிறது.ஏனென்றால் சென்னை மாவட்டத்தில் மழை பொழியும் பொழுது அவர் எங்கே எங்கே மழை அதிகமாக பொழிகிறதோ அங்கே சென்று பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளை உடனடியாக செய்து கொண்டிருந்தார். அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தால் கண்டிப்பாக மழை இன்றுடன் அனைத்து மழை நீரும் வெளியேற்றப்படும் என உறுதியளித்தார். 

Image


கேகே நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் எந்த மழை பெய்தாலும் தண்ணீர் வெளியேறுவதற்கு ஒரு சில நாட்கள் ஆகும் ஆனால் இப்பொழுது ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடையாது. வடசென்னையில் அங்கங்கே ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தன அதுவும் தற்போது  வெளியேற்றப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். இரவில் இருந்து தற்போது வரை 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.