திமுக ஆட்சியில் பெண்கள், முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் எல்.முருகன்..!
Mar 21, 2026, 13:51 IST1774081302538
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், கஞ்சா போதை கும்பல் அட்டகாசத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.‘திமுக ஆட்சியில் கஞ்சா போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுவதால் பெண்கள், முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“மக்கள் விரோத திமுக ஆட்சியை இந்த தேர்தலுடன் வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

